செய்திகள்

கரோனா பாதிப்பு: பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார்

DIN


பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக், கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.

1943-ல் பிறந்த கல்தூண் திலக், நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் நடித்தவர். பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வெள்ளிக்கிழமை விரதம் போன்ற படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய கல்தூண் படம் 1981-ல் வெளியானது. இப்படத்தில் சிவாஜியின் மகனாக நடித்தார். இதனால் அவர் கல்தூண் திலக் என அழைக்கப்பட்டார்.

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கல்தூண் திலக், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.  

சென்னையில் வசித்து வந்த கல்தூண் திலக், கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT