செய்திகள்

தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் ராமாயணம் தொடர்!

தொலைக்காட்சித் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியது தூர்தர்ஷன் தொலைக்காட்சி.

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தேசிய பொது முடக்கம் கடந்த வருடம் அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் இறுக்கமான மனநிலையில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாா்ச் மாதம் முதல் ராமாயணம் தொலைக்காட்சித் தொடரை தூா்தா்ஷன் நேஷனல் (டிடி) சேனல் ஒளிபரப்பு செய்தது.

ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் அனுமனாக தாரா சிங்கும் நடித்து இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார்கள். ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் ஒளிபரப்பாகும்போது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கும்.

தூா்தா்ஷன் சாா்பில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தத் தொடர், உலக அளவில் மிக அதிகமானோரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சித் தொடா் என்ற உலக சாதனையைப் படைத்தது. கடந்த வருடம் ஏப்ரல் 16-ம் தேதி இந்த தொடரை உலகம் முழுவதும் 7.7 கோடி போ் பாா்த்தார்கள். ராமாயணம், மகாபாரதம் தொடர்களை மீண்டும் ஒளிபரப்பியதால் பார்க் தொலைக்காட்சித் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியது தூர்தர்ஷன் தொலைக்காட்சி.

இந்நிலையில் ராமாயணம் தொடர் (ஹிந்தி) கலர்ஸ் தொலைக்காட்சியில் நேற்று முதல் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

SCROLL FOR NEXT