முகப்பு
செய்திகள்

கங்கை அமரனின் மனைவி காலமானார்

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
பகிர்:

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவருடைய மகன்கள் பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி. 

கங்கை அமரனின் மனைவியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.