செய்திகள்

நடிகை சுனைனாவுக்கு கரோனா பாதிப்பு

எனக்கு இப்போது ஓய்வு தேவைப்பட்டாலும் உதவி தேவைப்படுபவர்களுக்காக...

DIN

நடிகை சுனைனாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

2008-ல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் சுனைனா. 2019-ல் இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி படம் வெளிவந்தது. 

இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் சுனைனா. இதுபற்றி அவர் கூறியதாவது:

பாதுகாப்பாக இருந்தும்கூட கரோனா வைரஸ் தொற்று எனக்கு உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு எல்லா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாருடனும் நான் தொடர்பில் இல்லை. என் குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனக்கு இப்போது ஓய்வு தேவைப்பட்டாலும் உதவி தேவைப்படுபவர்களுக்காக சமூகவலைத்தளங்களில் நான் தொடர்ந்து இயங்குவேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT