செய்திகள்

உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது?: நடிகர் சிம்பு

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்பமுடியாத ஒன்று, ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு. 

DIN

தனது தாயின் மறைவினால் சோகத்தில் இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி ஆகிய இருவருக்கும் ஆறுதல் தெரிவித்து நடிகர் சிம்பு கடிதம் வெளியிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவருடைய மகன்கள் பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி. 

கங்கை அமரனின் மனைவியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் தாயை இழந்துள்ள வெங்கட் பிரபுவுக்கும் பிரேம்ஜிக்கும் நடிகர் சிம்பு கடிதம் எழுதியுள்ளதாவது:

வெங்கட் பிரபு, பிரேம்ஜி என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்பமுடியாத ஒன்று, ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு. 

அப்பாவுக்கும் குடும்பத்துக்கும் உங்கள் அனைவருடனும் இழப்பையும் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT