முகப்பு
செய்திகள்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம்: 3-வது பாடலின் விடியோ வெளியானது

இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார் தனுஷ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன்.

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஜகமே தந்திரம் படத்தின் இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக நேத்து என்கிற பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார் தனுஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.