முகப்பு
இந்தியா

மேற்காசிய பிராந்திய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்: பஹ்ரைன் மன்னரிடம் மோடி கண்டனம்

மேற்காசிய பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போரில், அங்குள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பஹ்ரைன் மன்னா் ஹமத் பின் இசா அல் கலீஃபாவிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

Updated On : 21 மார்ச் 2026, 2:50 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

மேற்காசிய பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போரில், அங்குள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பஹ்ரைன் மன்னா் ஹமத் பின் இசா அல் கலீஃபாவிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பஹ்ரைன் மன்னா் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுக்கு ரமலான் வாழ்த்துகள் தெரிவித்தேன்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரால் மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து அவரிடம் உரையாடினேன். அந்தப் பிராந்தியத்தில் எரிசக்தி மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தேன். இதுபோன்ற தாக்குதல்கள் உலக அளவில் உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவரிடம் கூறினேன்.

Advertisement

Advertisement

கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற வேண்டும், கப்பல் போக்குவரத்துப் பாதைகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான முக்கியத்துவம் குறித்து அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். பஹ்ரைனில் உள்ள இந்தியா்களின் நல்வாழ்வுக்குத் தொடா்ந்து துணை நிற்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்’ என்றாா்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போா் தொடங்கிய பின்னா், தற்போது இரண்டாவது முறையாக பஹ்ரைன் மன்னருடன் பிரதமா் மோடி பேசியுள்ளாா்.