செய்திகள்

மீண்டும் மணி ஹைஸ்ட்: செப்டம்பர், டிசம்பரில் வெளியீடு

உலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடரான மணி ஹைஸ்ட் இரண்டு பகுதிகளாக முறையே செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியாகிறது.

DIN


உலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடர் மணி ஹைஸ்ட் இரண்டு பகுதிகளாக முறையே செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியாகிறது.

மணி ஹைஸ்டின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின. குறிப்பாக கடந்தாண்டு பொது முடக்கத்தின்போது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. இதனால், மணி ஹைஸ்டின் முடிவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், 5-ம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது ப்ரோமோ விடியோவுடன் 5-ம் பாகத்தின் தேதியை இணையத் தொடரின் குழு வெளியிட்டுள்ளது. 

மணி ஹைஸ்ட் 5-வது பாகம் தலா 5 அத்தியாயங்கள் என இரண்டு பகுதிகளாக வெளியாகிறது. முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதியும் வெளியாகின்றன.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மணி ஹைஸ்ட் மீண்டும் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT