லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் படக்குழுவினருடன் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.