செய்திகள்

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்

தமிழ்த் திரையுலகின் பிரபல நடன இயக்குநரான கூல் ஜெயந்த் இன்று காலமானார்.

DIN

தமிழ்த் திரையுலகின் பிரபல நடன இயக்குநரான கூல் ஜெயந்த் இன்று காலமானார்.

1996-ல் காதல் தேசம் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார் கூல் ஜெயந்த். இவருடைய இயற்பெயர் ஜெயராஜ். காதல் தேசம் படத்தில் முஸ்தபா முஸ்தபா, கல்லூரிச் சாலை பாடல்களுக்கு நடனம் அமைத்து முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இதன்பிறகு ஏராளமான படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ராஜூ சுந்தரம் நடனக்குழுவில் அதற்கு முன்பு பணியாற்றினார். பல பாடல்கள் இவர் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன் லால் உள்பட முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார். ஒருகட்டத்தில் தமிழ் படங்களை விடவும் மலையாளப் படங்களுக்கு அதிகமாக நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கூல் ஜெயந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளன. கூல் ஜெயந்த் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

SCROLL FOR NEXT