செய்திகள்

''விஸ்வாசம் எப்படி வெற்றிபெற்றதுனு தோணுச்சு'' : இயக்குநர் சிவா குறித்து நடிகர் ரஜினிகாந்த் அதிரடி : வெளியான ஆடியோ

விஸ்வாசம் படம் பார்த்த அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஹுட் என்ற செயலி மூலம் பகிர்ந்துகொண்டார். 

DIN

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஸ்வாசம் படம் பார்த்த அனுபவத்தை ஹுட் செயலியின் மூலம் பகிர்ந்துகொண்டார். 

அதில் பேசிய அவர், ''பேட்ட' படம் வெளியான அன்றே சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியானது. இரண்டு படமும் சூப்பர் ஹிட். மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

'விஸ்வாசம்' படம் இவ்வளவு பெரிய வெற்றியா இருக்கே, அதனை நாம் பார்க்க வேண்டுமே என்று தோன்றியது. எனது நண்பரும், விஸ்வாசம் பட தயாரிப்பாளருமான தியாகராஜனிடம், விஸ்வாசம் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். படம் பார்த்தேன். இடைவேளை வரை படம் நன்றாக இருந்தது. ஆனால் இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றிபெற படத்தில் அப்படி என்ன இருந்தது என்ற எண்ணம் உருவானது. 

ஆனால் படம் போகப் போக, கிளைமாக்ஸின் போது படத்தின் கலரே மாறியது. குறிப்பாக அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் மிக சிறப்பாக இருந்தது. எனக்கு தெரியாமலேயே கையைத் தட்டினேன். தியாகராஜனுக்கு வாழ்த்து சொன்னேன். மேலும் சிவாவை சந்திக்க வேண்டும் என்றேன்.

சிவாவை சந்தித்தேன். அவர் பேசும்போது குழந்தை பேசுவது போல இருந்தது. ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. அவரை எனக்கு மிக பிடித்துப்போனது. அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு எனக்கு கதை இருக்கிறதா என்று கேட்டேன். உங்களுக்கு ஹிட் கொடுப்பது மிக சுலபம் என்று பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT