செய்திகள்

வில்லனுக்கு 'தனுஷ்'கோடி என்ற பெயர் வைத்ததன் பின்னணி? : வெங்கட் பிரபு அதிரடி

மாநாடு படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனுஷ்கோடி எனப் பெயர் வைத்ததன் பின்னணி குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கு லாபம் கிடைத்து வருவதாக வெங்கட் பிரபு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.22 கோடிகளை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்தார். 

இந்த நிலையில் அப்துல் காலிக் என்ற வேடத்தில் சிம்புவும், தனுஷ் கோடி என்ற வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். இந்த நிலையில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனுஷ் கோடி என்ற பெயர் வைத்ததன் பின்னணி குறித்து வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். 

அதில், ''ஒரு பவர்ஃபுல் பெயர் யோசித்தோம். சிம்பு என்றதும் தனுஷ் தான் நியாபகம் வருவார். ஒரு காட்சியில் கூட 'உனக்கு யாரு வேண்டுமானாலும் தலைவனாக இருக்கலாம். எனக்கு தனுஷ்கோடி தான் ஒரே தலைவர்' என சிம்பு சொல்வார். தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் வெளியில் இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக்கொள்வார்கள். தனுஷே 'போன் செய்து நன்றாக இருக்கிறது' என்று சொல்வார். கோபப்பட மாட்டார் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT