செய்திகள்

விஜய் டிவி நடிகைக்கு விரைவில் திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா ?

விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து வரும் வைஷாலி தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

DIN

விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து வரும் வைஷாலி தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

மேலும் பிரபல விஜய் தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் முதலில் நடித்தவர் இவர் தான். வைஷாலி தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார், அப்போது எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அந்தப் பதிவில், திருமணமாவதற்கு முன் கொண்டாடும் கடைசி பிறந்த நாள்.விரைவில் நான் திருமதி தேவ் ஆக மாறப்போகிறேன். என்னை எப்பொழுதும் சிறப்பானவளாக உணரச் செய்கிறாய் சத்யதேவ். உன்னுடன் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கிறேன். என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் அவர் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, திருமணத்துக்கான பொருட்களை வாங்க கிளம்பிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT