செய்திகள்

நாக சைதன்யாவைப் பிரிகிறார் சமந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

DIN

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

நாக சைதன்யாவும் சமந்தாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். இந்தப் படம் தான் சமந்தாவுக்கு முதல் படம். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தனர்.

திருமணத்துக்கு பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடித்த மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருவரும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர்.

இந்த நிலையில் சமந்தா கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சமந்தா அக்கினேனி என்ற பெயரை வெறும் எஸ் என்ற எழுத்தாக மாற்றினார். அக்கினேனி என்பது நாக சைதன்யாவின் குடும்பப் பெயர். இதனால் நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

மேலும் நாகர்ஜூனாவின் பிறந்த நாள் விழாவில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. மேலும், நாகர்ஜூனா குடும்பத்தினர் ஆமிர் கானுக்கு அளித்த விருந்திலும் சமந்தா பங்கேற்கவில்லை. இந்த இரு சம்பங்களையும் இணைத்து சமந்தாவை பிரிவது உறுதி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இருப்பினும் சமந்தாவும், நாக சைதன்யாவும் இதுகுறித்து எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.

நாக சைதன்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான லவ் ஸ்டோரி படத்துக்கு சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்க, அவருக்கு நாக சைதன்யாவும் நன்றி கூறினார். மேலும் சமந்தாவின் மாமாவான நாக அர்ஜூனா தனது அப்பா நாகேஷ்வரராவ் குறித்து வெளியிட்ட விடியோ பதிவுக்கு, அழகாக இருக்கிறது மாமா என்று சமந்தா வாழ்த்தினார்.  இதனால் நாக சைதன்யா - சமந்தாவின் விவாகரத்து செய்தி பொய்யாக இருக்குமோ என்று கூட ரசிகர்கள் கருதினர்.

இந்த நிலையில் தான் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும், நாக சைதன்யாவும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் எங்களை ஆதரியுங்கள். எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து இதனை எளிதாக கடந்துபோக எங்களுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளா்.  

நாக சைதன்யாவும், அதே கருத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இருவரும் பிரிவதாக அறிவித்திருப்பது அவர்களது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT