செய்திகள்

சென்னை 28 படத்தில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரை கவனித்துள்ளீர்களா?: வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அபினய், வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.  

DIN

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அபினய், வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.  

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. கடந்த சீசன்களப் போல் அல்லாமல் இந்த சீசனில் பெரும்பாலானவர்கள் புதுமுகம் என்பதால், துவக்கத்தில் நிகழ்ச்சியைக் காணும் ஆர்வம் ரசிகர்களிடையே சற்று குறைந்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜு ஜெயமோகன், அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபினய், சின்ன பொண்ணு, பவானி ரெட்டி, தாமரை செல்வி, சிபி சந்திரன், நடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி ஜெயதேவன், அக்ஷ்ரா ரெட்டி, நிரூப் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் அபினய் கலந்துகொண்டுள்ளார். அபினய் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் அபினய் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT