செய்திகள்

25வது படத்துக்காக வெற்றிப் பட இயக்குநருடன் கைகோர்க்கும் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தனது 25வது படத்துக்காக அர்ஜூன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் படத்துக்காக இணையவுள்ளார். 

DIN

நடிகர் பிரபாஸ் தனது 25வது படத்துக்காக அர்ஜூன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் படத்துக்காக இணையவுள்ளார்.  

விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்தத் திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழில் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் இருமுறை இந்தப் படம் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அர்ஜூன் ரெட்டி படத்துக்குப் பிறகு இயக்குநர் சந்தீப்பின் படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அவர் பிரபாஸ் உடன் இணைவார் என்று சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. 

இந்த நிலையில் அந்த தகவல் இன்று (அக்டோபர் 7) உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் டி சீரிஸ் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர். ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 8 மொழிகளில் உருவாகவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதியில் நல்லகண்ணுக்கு புகழஞ்சலி

27.2.1976: த.நா. நில சீர்திருத்த நடவடிக்கை - 85000 ஏக்கர் 40500 குடும்பங்களுக்கு வினியோகம்

நகை மதிப்பீட்டாளா் கொலையில் மனைவி, மகன் உள்பட 5 போ் கைது

கச்சத்தீவு தேவாலயத் திருவிழா இன்று தொடக்கம்!

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

SCROLL FOR NEXT