முகப்பு
செய்திகள்

பிரபல நடிகர் நெடுமுடி வேணு திடீர் மரணம்

பிரபல நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

பிரபல நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். 

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாளமயம் உட்பட பல நடிங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வந்தார். 

நெடுமுடி வேணு சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்று உள்ளார். 

சமீபத்தில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 10) அவர் உடல்நிலை சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (அக்டோபர் 10) அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரையுலகினிரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.