செய்திகள்

வசூலை வாரிக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் : இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான படம் டாக்டர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க, வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும், இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், அர்ச்சனா, தீபா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவான இந்தத் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.7.36 கோடி எனவும், இரண்டாம் நாள் வசூல் ரூ.8.05 கோடி எனவும் தகவல் கிடைத்துள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளின் வசூல் அதிகரித்திருப்பதற்கு இந்தப் படத்துக்கு கிடைத்த நேர்மறையான விமரிசனங்களே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வாரமும் 4 நாட்கள் விடுமுறை வருவதால் டாக்டர் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT