செய்திகள்

'அவர் கண்ணில் தெரிகிறது' : பிரியங்காவை விரும்புகிறாரா அபினய் ? என்ன சொல்கிறார் அபிஷேக் ?

பிக்பாஸ் ப்ரமோவில் பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய்  விரும்புவதாக தெரிவிக்கிறார். 

DIN

பிக்பாஸ் ப்ரமோவில் பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய் விரும்புவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நமிதா மாரிமுத்து திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சையானது. அவர் விலகியதற்கு பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், அவர் சிறுநீரக தொற்று ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ச்சியை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வழக்கம் போல இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனித்தனி குழுவாக போட்டியாளர்கள் பிரியத் துவங்கியுள்ளனர்.  இதனால் போட்டியாளர்களிடையே பிரச்னை உருவாகத் துவங்கியுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரமோவில் அபிஷேக் போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஐக்கி பெர்ரி வினோத பிறவி போன்று தெரிகிறார். இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை கூறி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் என போட்டியாளர்கள் பற்றி தனது கணிப்பைத்  தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில், அபிஷேக், பிரியங்கா, நிரூப் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய் நேசிக்கிறார். அது அவர் கண்களிலேயே தெரிகிறது என்று பேசினார். அவர் சொல்வது உண்மையா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT