செய்திகள்

பாடகியை மணக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகன் : வெளியான புகைப்படங்கள்: பிரபலங்கள் வாழ்த்து

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் ஸ்வரா சாகருக்கும் பாடகி சஞ்சனாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

DIN

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் ஸ்வரா சாகருக்கும் பாடகி சஞ்சனாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தமிழில் நரசிம்மா, ஷாஜகான், யூத், திருப்பாச்சி, மலைக்கோட்டை, படிக்காதவன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் மணி சர்மா. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளரான இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம். 

இந்த நிலையில் இவரது மகன் ஸ்வரா சாகர் மஹதிக்கும் பாடகர் சஞ்சனாவிற்கும் நேற்று (அக்டோபர் 12) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. ஸ்வரா சாகரும் தெலுங்கில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாடகி சஞ்சனாவும் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களில் பாடல்களைப் பாடி வருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT