முகப்பு
செய்திகள்

’அரண்மனை 3‘ நாளை(அக்-14) வெளியாகிறது

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் நாளை(அக்-14) திரையரங்கில் வெளியாகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
’அரண்மனை 3‘ நாளை(அக்-14) வெளியாகிறது
பகிர்:

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் நாளை(அக்-14) திரையரங்கில் வெளியாகிறது.

நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்ட ஹாரர் படங்களில் ஒன்றான ’அரண்மனை’ வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதன்பின் தொடர்ந்து அதன் இராண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது  மூன்றாம் பாகமான  ‘அரண்மனை 3’ தயாராகி விட்டதால் இப்படம் நாளை அக்டோபர்-14 அன்று திரையரங்கில் வெளியாகிறது. 

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யா.சி இசையமைத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →