வீட்டு வடிவமைப்பாளர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அன்பே ஆருயிரே பட நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. தமிழில் சில படங்களில் நடித்த அவர், தெலுங்கு ஹிந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீரா சோப்ரா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதில், 'நான் மும்பை அந்தேரி பகுதியில் ஒரு வீடு வாங்கியிருந்தேன். வீட்டை வடிவமைக்க ராஜிந்தர் திவான் என்ற வீடு வடிவமைப்பாளரை நியமித்தேன். அவர் ஊதியமாக ரூ. 17 லட்சம் கேட்டார். இந்த நிலையில் நான் படப்பிடிப்பிற்காக வெளியே செல்லவிருப்பதாக கூறினேன். அப்பொழுது ராஜிந்தர் 8 லட்சத்தை முன் பணமாக கேட்டார். கிட்டத்தட்ட 50 சதவிகித பணத்தை முன் பணமாக கேட்டதால் முதலில் தயங்கினேன்.
இதையும் படிக்க | பிரபல சின்னத்திரை தொடரில் கதாநாயகனாக நடிக்கும் லொள்ளு சபா ஜீவா
ஆனால் முன் பணம் அளித்தால் நான் படப்பிடிப்பு திரும்பி வருவதற்குள் பெரும்பாலான பணிகளை முடித்து விடுவதாக ராஜிந்தர் வாக்குறுதி அளித்தார். அவரை நம்பி வீட்டை ஒப்படைத்துவிட்டு சென்றேன். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அவர் பயன்படுத்திய பொருட்கள் தரமற்றதாக இருந்தது.
மும்பையில் அடிக்கடி மழை பெய்யும் என்பதால் பொருட்கள் தாங்காது என்று கூறி அதனை மாற்ற சொன்னேன். ஆனால் ராஜிந்தர் அதனை மறுத்ததோடு, அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளினார்.
பின்னால் கையால் எழுதப்பட்ட ரசீதை எனக்கு அளித்துவிட்டு சென்றுவிட்டார். பணத்தைத் திருப்பி அளிக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. இதன் காரணமாக அவர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்தேன். ஆனால் பிரபலமான பெண். என்னிடமே அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்றால் மற்றவர்களிடம் நினைத்து பார்க்க முடியவில்லை.
நான் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, காவல்துறையினர் முன்பும் என்னிடம் அவர் தவறாக நடந்துகொண்டார். இந்த மாதிரியான ஆட்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.