'உங்கள எல்லோரும் பாராட்டுறது...': சூர்யாவுக்கு உருக்கமாக நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் - எதுக்கு தெரியுமா ?
உடன்பிறப்பே படத்தின் மூலம் இயக்குநர் இரா.சரவணனுக்கு வாய்ப்பளித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
உடன்பிறப்பே படத்தின் மூலம் இயக்குநர் இரா.சரவணனுக்கு வாய்ப்பளித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள 'உடன்பிறப்பே' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன், நிவேதிதா சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்னர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்ணன் தங்கைக்கு இடையிலான உறவு சிக்கலை இந்தப் படம் பேசியுள்ளது.
Advertisement
இதையும் பார்க்க | கண்ணழகி அனு இமானுவேல் - புகைப்படங்கள்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உடன்பிறப்பே வாழ்த்துகள் சரவணன் அண்ணா. உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் வெற்றியாக அமையும். உங்களை எல்லோரும் பாராட்டுவதைக் கேட்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. சரவணன் அண்ணாவின் கனவை நினைவாக்கிய சூர்யா சார், சசிகுமார் சார், ஜோதிகா மேம் ஆகிய படக்குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.