செய்திகள்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யா

மறைந்த நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை ஆர்யா நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்தார். 

DIN

மறைந்த நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை ஆர்யா நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்தார். 

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நடிகர் விவேக் தனது நகைச்சுவை காட்சிகளின் மூலம் சமூக கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் தொடர்ந்து மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் முன்னிலையில் மரங்கள் நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல் கலாமின் பிறந்த நாளின் முன்னிட்டு நடிகர் விவேக் தன்னுடன் இணைந்து மரங்கள் நட என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அவருக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். எதிர்பாராத விதமாக இன்று அவர் நம்மிடம் இல்லை. எனவே அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன் என்றார். 

நடிகர் விவேக் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்த அரண்மனை 3 நேற்று(அக்டோபர் 14) வெளியாகியிருந்தது. நடிகர் விவேக்கின் கடைசி படமாக இந்தப் படம் அமைந்தது. இந்தப் படத்தில் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சிகளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT