செய்திகள்

சிறந்த இந்தியத் திரைப்படமாக தனுஷ் மற்றும் மாரி செல்வராஜின் கர்ணன் தேர்வு

பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக தனுஷின் கர்ணன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

DIN

பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக தனுஷின் கர்ணன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லால், நட்டி என்கிற நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான படம் கர்ணன். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பெங்கலளூரு இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. இந்த விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் தகவல் தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை இ.வி.கணேஷ் பாபு இயக்கிய கட்டில் என்ற திரைப்படம் பெற்றுள்ளது. ஷ்ருஷ்டி டாங்கே நடித்துள்ள இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT