செய்திகள்

அந்த செய்திகள் உண்மையல்ல - 'தர்மதுரை 2' பற்றிய தயாரிப்பாளரின் அறிவிப்புக்கு சீனு ராமசாமி மறுப்பு

தர்மதுரை 2 படத்தை நான் இயக்கப்போவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என இயக்குநர் சீனு ராமசாமி விளக்கமளித்துள்ளார். 

DIN

தர்மதுரை 2 படத்தை நான் இயக்கப்போவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என இயக்குநர் சீனு ராமசாமி விளக்கமளித்துள்ளார். 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை. இந்தப் படம் விமரிசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் விரைவில் உருவாகவிருப்பதாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் சீனு ராமசாமி இயக்கத்தல் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? அல்லது முற்றிலும் புதிய குழு இந்தப் படத்தில் பணியாற்றவிருக்கிறார்களா? என்பது குறித்து தகவல் இல்லை. 

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழத்துகள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் எனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வரும். என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்கள் பாமகவில் இருந்து நீக்கம்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

SCROLL FOR NEXT