செய்திகள்

காப்பாற்றுமா சிவாவின் விநாயகர் பக்தி ?: வீரம், வேதாளம் வரிசையில் 'அண்ணாத்த'வில் வெற்றி தொடருமா ?

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் கணேசன் எனக் கூறப்படுகிறது. வீரம் படத்தில் அஜித் பெயர் விநாயகம், வேதாளம் படத்தில் அஜித்தின் பெயர் கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேதாளம் படத்தில் வீர விநாயகா என்ற பாடலும் இடம் பெற்றிருக்கும். 

இதன் காரணமாக வீரம், வேதாளம் படங்களின் வெற்றி அண்ணாத்த படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் தங்கை உறவு குறித்து இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

SCROLL FOR NEXT