ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. டி. இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்திலிருந்து டீசர் மற்றும் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது வா சாமி என்ற பாடலும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. பாடலில் ரஜினி மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.