செய்திகள்

அப்பா தனுஷ் தேசிய விருது வாங்கும்போது பெருமையோடு பார்க்கும் மகன்கள் - விடியோ வைரல்

DIN

67வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்டோபர் 25) நடைபெற்று வருகிறது. விழாவில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். 

விழாவில் பங்கேற்க தனுஷ் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பங்கேற்றிருந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில், அவரும் தனது மனைவி லதாவுடன் நிகழ்வில் கலந்துகொண்டார். 

இதனையடுத்து தனுஷ் விருது பெறும்போது அந்த நிகழ்வை அவரது மொத்த குடும்பத்தினரும் மிக பெருமையுடன் பார்த்தனர். குறிப்பாக அவரது மகன்கள் எழுந்து நின்று கைத்தட்டுகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த அசுரன் படத்தை தாணு தயாரித்திருந்தார். சிறந்த தமிழ்படத்துக்கான தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT