நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டிரைலர் இன்று (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரஜினி காந்த்தின் தங்கையா கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாகவும், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.