செய்திகள்

இது விதியா ? விதிமீறலா ?: பிக்பாஸில் விசாரிக்கவிருக்கும் கமல்

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் துவங்கி 25 நாட்களுக்கு மேலாகிறது. துவக்கத்தில் நிகழ்ச்சியைக் காண மக்களிடையே ஆர்வம் குறைவாக காணப்பட்டது. ஆனால் தற்போது மக்களிடையே சற்று ஆர்வம் அதிகரித்துள்ளதை சமூக வலைதள பதிவுகள் உணர்த்துகின்றன.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக அபிஷேக் வெளியேறினார். இந்த வாரம் எலிமினேஷனுக்கான பட்டியலில் வருண், அபிநய், அக்சரா, பவானி, சின்ன பொண்ணு, இமான், பிரியங்கா, இசைவாணி ஆகியோர் உள்ளனர். இந்த வராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சின்ன பொண்ணு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. 

மற்ற போட்டியாளர்களான இசைவாணி, வருண், பாவனியிடம் நாணயங்கள் உள்ளன. பஞ்ச தந்திரம் டாஸ்க்கில் நெருப்பு சக்தி நாணயத்தை வென்ற இசைவாணிக்கு உணவு மற்றும் சமையல் அறை முழுவதும் தனது கட்டுப்பாடுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்ற சக்தியை பிக்பாஸ் வழங்கினார். ஆனால் அதனை இசைவாணி சரியாக பயன்படுத்தவில்லை என பிக்பாஸ் அழைத்து கண்டித்தார். 

அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 25 நாட்களுக்கும் மேலாகிறது. ஆனால் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இதன் காரணமாக அபிநய் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. நாணயத்தை வைத்திருக்கும் போட்டியாளர்கள் அதனை பயன்படுத்துவார்களேயானால் எலிமினேஷனலில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்றைய (அக்டோபர் 30) பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது. பின்னணியில் உத்தம வில்லன் பட இசை ஒலிக்க தோன்றுகிறார் கமல். பின்னர் பேசும் அவர், இது விதியா? இது விதி விலக்கா ? விதி மீறலா ? என் தலைவிதியா ? அப்படினு கூட சிலர் விவாதித்திருக்கிறாரகள். இன்னும் சிலர் சனிக்கிழமை வரட்டும். நான் அவரிடமே பேசிக்கொள்கிறேன் என்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT