செய்திகள்

குழந்தை பிறந்த பிறகு தன் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகை சாயிஷா

குழந்தை பிறந்த பிறகு நடிகை சாயிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

DIN

குழந்தை பிறந்த பிறகு நடிகை சாயிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது . இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஷால், ''தான் மாமாவாகிவிட்டேன்'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இதனையடுத்து பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு முதன் முதலாக சாயிஷா தன் புகைப்படத்தை பகிர்ந்து, 'பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்கள் அவரிடம் குழந்தை எப்படி இருக்கிறது? என்று நலம் விசாரித்தனர். 

ஆர்யாவும் சாயிஷாவும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த 'டெடி' திரைப்படம் சில மாதங்களுக்கு முன் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது ஆர்யாவும் விஷாலும் இணைந்து 'எனிமி' படத்தில் நடித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT