முகப்பு
செய்திகள்

'பிச்சைக்காரன் - 2' படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

Updated On : 2 செப்டம்பர் 2021, 4:02 pm IST
'பிச்சைக்காரன் - 2' படப்பிடிப்பு தொடக்கம்
பகிர்:

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த விஜய் ஆண்டனி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது . பின் அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டதுடன் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

முன்னதாக  இப்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பும் , முதல் பார்வையும் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின்  பூஜையை நேற்று (செப்-1) சென்னையில் வைத்ததோடு படப்பிடிப்பையும் ஆரம்பித்தனர்.

பிச்சைக்காரன்-2 படத்தை விஜய் ஆண்டனி தயாரிப்பதோடு அவரே எழுதி இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments