செய்திகள்

இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு : ரசிகர்கள் அதிர்ச்சி

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது குதிரை ஒன்று இறந்ததன் காரணமாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது குதிரை ஒன்று இறந்ததன் காரணமாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, ரகுமான், பாபு ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. 

வரலாற்றுப் பின்னணி கொண்ட படம் என்பதால் போர் காட்சிகள் அதிகம் உள்ளன. நிறைய குதிரைகள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, குதிரை ஒன்று இறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பீட்டா அமைப்பு, மணிரத்னம் மீதும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மீதும் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் மீதும், அந்நிறுவனம் மீதும், அந்தக் குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

SCROLL FOR NEXT