நடிகையைக் காதலிக்கும் லியாண்டர் பயஸ்: இன்ஸ்டகிராமில் வெளியிட்ட புகைப்படம்
இருவரும் இணைந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.
2000-ம் ஆண்டு முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் கிம் சர்மா. லியாண்டரும் கிம் சர்மாவும் காதலித்து வருவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதை உறுதி செய்துள்ளார் கிம் சர்மா.
இருவரும் இணைந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கிம் சர்மா. அப்படத்தை லியாண்டரும் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டு மேஜிக் எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இருவரும் தங்களுடைய காதலைச் சமூகவலைத்தளத்தின் வழியாக வெளியிட்டுள்ளார்கள்.
Advertisement
Advertisement