செய்திகள்

'மங்காத்தா 2'வில் அஜித்துடன் நடிக்க விருப்பமா? - பஞ்சாபி மொழியில் ஹர்பஜனிடம் கேட்ட வெங்கட் பிரபு

பஞ்சாபி மொழியில் மங்காத்த 2 படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க விருப்பமா என ஹர்பஜன் சிங்கிடம் வெங்கட் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

பஞ்சாபி மொழியில் 'மங்காத்த 2' படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க விருப்பமா? என ஹர்பஜன் சிங்கிடம் வெங்கட் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், 'ஃபிரெண்ட்ஷிப்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர் 

இந்தப் படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, உதயகுமார் இசையமைத்துள்ளார்.  இந்தப் படத்தின் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த ஹர்பஜன சிங், ரொம்ப நன்றி, மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க என்று தமிழில் பதிலளித்துள்ளார். 

அதற்கு வெங்கட் பிரபு பஞ்சாபி மொழியில், ''நான் உங்களின் பெரிய ரசிகன், மங்காத்தா நடந்தால், எங்கள் தலயுடன் நீங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா ? உங்கள் ஃபிரெண்ட்ஷிப் படத்துக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

செல்ஃபி ஸ்மைல்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT