சந்திரமுகி -2 படத்தில் இணையும் வடிவேலு ? 
செய்திகள்

சந்திரமுகி -2 படத்தில் இணையும் வடிவேலு ?

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்பதற்காக போடப்பட்ட தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதால் தற்போது பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் வைகைப் புயல்.

DIN

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்பதற்காக போடப்பட்ட தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதால் தற்போது பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் வைகைப் புயல்.

முதலாவதாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகர்’ என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வடிவேலு அடுத்தடுத்து ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில்  கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்திருந்த நிலையில் தற்போது அப்படத்தில் முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை நடிகராக வடிவேலு ஒப்பந்தமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து செய்த நகைச்சுவைகள் இன்றும் பேசப்பட்டு வருவதால் இந்த பாகத்திலும் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT