செய்திகள்

ரன்வீர் சிங்கைப் புகழும் ஷங்கர் மகள் அதிதி (படங்கள்)

ரன்வீர் சிங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அதிதி. 

DIN

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. 

ட்விட்டர், இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளங்களில் இணைந்துள்ள அதிதி ஷங்கர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை, ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களும் பட பூஜையில் கலந்துகொண்டார்கள். 

ரன்வீர் சிங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அதிதி. 

உற்சாகமானவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆற்றலும் நேர்மறை எண்ணங்களும் உடையவர் என ரன்வீர் சிங்கைப் புகழ்ந்துள்ளார் அதிதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT