செய்திகள்

வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர்: டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் நடனமாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் நடனமாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. கரோனா முதல் அலையின்போது மூடியிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது வெளியான இந்தப் படத்தின் வெற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது. 

இந்தப் படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பாடல்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல்கள் மொழிகள் கடந்து ஹிட்டடித்தது. தெலுங்கு, ஹிந்தி மொழியில் பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிர அவை வைரலாகின. 

அந்த வகையில் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் விடியோ வைரலாகி வருகிறது. இந்த விடியோவை வாத்தி கம்மிங் என்ற ஹேஷ்டேக் போட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT