செய்திகள்

'பொன்னியின் செல்வன்' இணையத் தொடர் - முதல் பாகம் குறித்து ரஜினியின் மகள் சொன்ன தகவல்

பொன்னியின் செல்வன் இணையத் தொடர் குறித்து முக்கிய தகவலை ரஜினியின் மகள் சௌந்தர்யா பகிர்ந்துள்ளார். 

DIN

பொன்னியின் செல்வன் இணையத் தொடர் குறித்து முக்கிய தகவலை ரஜினியின் மகள் சௌந்தர்யா பகிர்ந்துள்ளார். 

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வரும் நிலையில், ரஜினியின் மகள் சௌந்தர்யா அதே பெயரில் இணையத் தொடர் இயக்கவிருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தத் தொடருக்கு இளையராஜா இசையமைப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா பணிகளுக்கும் பயணமும், விதியும் கொண்டிருக்கும். பொன்னியின் செல்வன் முதல் பாகமான புது வெள்ளம் இணையத் தொடரை தொடங்கவிருக்கிறோம். இதனை சரத்குமார் ஜோதி இயக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வன் அனிமேஷன் தொடராக உருவாக உள்ளது. இந்தத் தொடரை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமையிலான குழு தயாரிக்கவுள்ளது.

சௌந்தர்யா ஏற்கனவே ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் மற்றும் தனுஷ் கதாநாயகனாக நடித்த விஐபி பாகம் 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த வருத்தமும் இல்லை! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞர் கருத்து!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

SCROLL FOR NEXT