நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி : வெளியான புகைப்படம்
கார்த்திக்கு ஜோடியாக விருமன் படம் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றார்.
கார்த்திக்கு ஜோடியாக விருமன் படம் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றார்.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக விருமன் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, முத்தையா இயக்குகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.