முகப்பு
செய்திகள்

ஏழை குடும்பத்துக்கு ஜேசிபியை பரிசளித்த பிரபல நடிகர் - குடும்பத்தினர் நெகிழ்ச்சி

நடிகர் பிரகாஷ் ராஜ் ஏழை குடும்பம் ஒன்றுக்கு ஜேசிபி பரிசளித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

நடிகர் பிரகாஷ் ராஜ் மைசூரைச் சேர்ந்த ஏழை குடும்பம் ஒன்றுக்கு ஜேசிபி பரிசளித்துள்ளார். 

நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் இயக்குநர் என பன்முக கலைஞராக விளங்குபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். மேலும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

தனது பிரகாஷ் ராஜ் ஃபவுண்டேஷன் சார்பாக பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் மைசூர் அருகே ஸ்ரீரங்கபட்ணா என்ற ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு ஜேசிபியை பரிசளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், ஒருவருக்கு வாழ்வழிப்பதில் பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். 

பிரகாஷ் ராஜ் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழன் வேடத்தில் நடித்து வருகிறார்.  தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.