முகப்பு
செய்திகள்

விஜய் டிவி பிரபலத்துக்கு விரைவில் திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா ?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாளவிகா ராஜேஷ் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாளவிகா ராஜேஷ் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6வது சீசன் தொடரில் கலந்துகொண்டு பிரபலமானவர் மாளவிகா ராஜேஷ். பிரபல இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் மகள் தான் மாளவிகா. இந்தப் போட்டியில் தனது அசாத்தியமான திறமையால் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. 

மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் வைத்யாவின் தம்பி மகள் இந்த மாளவிகா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடல் பாடும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, ரசிகர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த நிலையில் இவர் தனக்கும் ஸ்ரீஹரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →