செய்திகள்

’சிவகுமாரின் சபதம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

DIN

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படமான ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள். 

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். பின் 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ படத்தின் நாயகனா அறிமுகமாகி அதற்கடுத்து ‘நான் சிரித்தால்’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.

இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில்  கதை, திரைக்கதை, வசனம் , இசை , இயக்கம் ,தயாரிப்பு என அனைத்துமே ஆதிதான் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் - 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT