செய்திகள்

''எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது'': வெளிப்படையாகக் கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

தனக்கும் விஜய்க்கும் உள்ள பிரச்னை குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்தேரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார். 

DIN

தனக்கும் விஜய்க்கும் உள்ள பிரச்னை குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்தேரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார். 

கடந்த ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியப் பதிவு செய்தார். இது நடிகர் விஜய்க்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

தனக்கும், அந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாவோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். 

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் பட விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ''துப்பாக்கி நான் துவங்கிய படம்.. சில காரணங்களால் நான் அந்தப் படத்தைத் தொடர முடியவில்லை. விஜய்க்கு மிகப் பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுவே. விஜய் முதலில் சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

முதலில் இளைஞர்களைக் கவரும் வகையில் படங்கள் செய்தேன். சமூக நோக்கத்தோடு ஒவ்வொரு இயக்குநரும் இருக்க வேண்டும். உண்மையை பயப்படாமல் உரக்க சொல்ல வேண்டும். 

விஜய்யின் பெயர் காரணம் குறித்து ஒரு விழாவில் பேசியிருந்தேன். ஆனால் இரண்டு தினங்களில் மாற்றி மாற்றி பேசுகிறார்கள். எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா? சில நாட்களில் அது சரியாகிவிடும். அதுபோல தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக்கொள்வோம். நாளை சேருவோம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT