நடிகர் சித்தார்த்திற்கு லண்டனில் அறுவைச் சிகிச்சை: இயக்குநர் தகவல் 
செய்திகள்

நடிகர் சித்தார்த்திற்கு லண்டனில் அறுவைச் சிகிச்சை: இயக்குநர் தகவல்

அறுவைச் சிகிச்சைக்காக நடிகர் சித்தார்த் லண்டன் சென்றுள்ளதாக மகா சமுத்திரம் திரைப்பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

DIN

அறுவைச் சிகிச்சைக்காக நடிகர் சித்தார்த் லண்டன் சென்றுள்ளதாக மகா சமுத்திரம் திரைப்பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் கதாநாயகன் சித்தார்த்.

ஆரம்பகாலகட்டத்தில் உதவி இயக்குநராக இருந்த அவர், தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து தெலுங்கு உள்பட ஜிகர்தண்டா, அருவம், அவள் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார். 

அவர் தற்போது மகாசமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அஜய் பூபதி இயக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா ஹைதாராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் கலந்துகொள்ளவில்லை.

நடிகர் சித்தார்த் அறுவைச் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதனால் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் இயக்குநர் விளக்கம் அளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT