செய்திகள்

நடிகர் விஜய்யின் 'தளபதி 66' படத்தை அறிவித்த பிறகு தயாரிப்பாளரும், இயக்குநரும் செய்த காரியம்!

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு இயக்குநரும், தயாரிப்பாளர்களும் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  

DIN

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு இயக்குநரும், தயாரிப்பாளர்களும் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்தப் படம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இந்தப் படத்தை வம்சி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி - நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ள 'தோழா' படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுனத்தின் சார்பாக, தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'தளபதி 66' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, சிரிஷ், இயக்குநர் வம்சி ஆகியோர் திருப்பதி கோயிலில் சாம் திரசனம் செய்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தின் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு!

அமெரிக்க - சீன வா்த்தகப் போரால் இந்தியாவுக்கு பலன்: நிபுணா்கள் கணிப்பு

நில இழப்பீடு விவகாரம்: மதுக் கடைகளின் விற்பனை தொகையை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT