விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர் 
செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

DIN


விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சந்திரசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது பெயரைப் பயன்படுத்தி பொதுக்கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் சோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கக்கோரி நடிகர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இது தொடர்பான பதில் மனுவை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று (செப்.27) தாக்கல் செய்தார். இதில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என்றும் ரசிகர்களாக தொடர்வதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT