முகப்பு
செய்திகள்

அச்சு அசல் நடிகர் விஜய் போன்றே இருக்கும் நபர்: வைரலாகும் புகைப்படம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் தோற்றத்தில் இருக்கும் நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.

இதனையடுத்து விஜய்யின் 66வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். வம்சி இயக்கத்தில் தமிழில் ஏற்கனவே கார்த்தி - நாகர்ஜூனா இணைந்து நடித்த தோழா திரைப்படம் வெளியாகியிருந்தது.

தளபதி 66 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

நடிகர் விஜய்க்கு தமிழகத்துக்கு நிகராக கேரளத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தளபதி 66 படத்துக்குப் பிறகு ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீப காலமாக நடிகர் விஜய் குறித்து தகவல்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் அப்படியே விஜய் தோற்றத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கேரளத்தை சேர்ந்த அவர் மாஸ்டர் பட விஜய் தோற்றத்தில் இருக்கிறார். சிறுவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →