’அரபிக் குத்து’ பாடல் புதிய சாதனை
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த பிப்.14ஆம் தேதி காதலர் தினத்தன்று சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் யூடியூப்பில் தொடர்ந்து பார்க்கப்பட்டு வந்ததுடன் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி இணையதளங்களில் விடியோக்களை பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில், அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் இதுவரை 252 மில்லியன்(25 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
'பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஏப்ரல் 2) மாலை வெளியாகவுள்ளது. ஏப்ரல் -13 அன்று படம் திரைக்கு வர இருக்கிறது.